Monday, January 1, 2007

சச்சார் கமிட்டி அறிக்கையும், முஸ்லிம்கள் செய்யவேண்டியதும்

சச்சார் கமிட்டியின் அறிக்கை வெளிவந்த பின் முஸ்லிகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற குரல் பா.ஜ.க தவிர அனைத்து தரப்பிலிருந்து ஒழிக்க ஆரபித்து கிட்டத்தட்ட ஓய்ந்து விட்டது. உ.பி மாநில தேர்தல் நேரத்தில் ஓய்ந்த குரல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம். சமீபத்தில் ஓர் மின் அஞ்சல் இனையத்தில் உலா வந்தது, சிலர் படித்திருக்கலாம், பலர் ஓரங்கட்டியிருக்கலாம். அவர்களுக்காக இதோ, அம்மின் அஞ்சலின் சாரம்சம், இளைஞர் குழுவினர், கர்நாடக மாநிலத்தில், பல கிராமங்களில் உள்ள பள்ளிகூடங்களுக்கு சென்று கல்வியின் அவசியம் மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. எவ்வாறு பாடங்களை மனணம் செய்வது, பாடங்களை எவ்வாறு தெரிவு செய்து படிப்பது, பரீட்சை காலங்களில் எவ்வாறு பாடங்களை திட்டமிடுவது போன்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி சாதனை புரிந்திருக்கிறது. இந்த ஒருவார நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட 3000 மேற்ப்பட்ட 10-ம் மற்றும் 12-ம் மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டு பயன் அடைந்து இருக்கின்றனர். இன்று நமக்கு தேவை இது போன்ற கல்வி சம்பந்தமான ஊக்குவிப்புதான். இன்ஷா அல்லாஹ், நம் சமுதாயத் தலைவர்கள், ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தால், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அதற்காக போராட வேண்டும். எந்த சமுதாயம் கல்வியில் முன்னேறி இருக்கிறதோ, அச் சமுதாயம், என்றும் சமூகத்தில் பின் தங்காது. என்னதான் இட ஒதுக்கீடு செய்தாலும், படித்தவர்கள் இல்லையென்றால், என்ன் பயன்?. ஒரு பக்கம், த மு மு க விலிருந்து , PJ பிரிந்து வந்தபின், அவர்களுக்கிடையே நடைபெறும் ego war தான் இனையத்திலும், மின் அஞ்சல்களையும் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. இந்த தலைவர்களில் ஒருவராவது, கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகள் பற்றி பேசியிருப்பார்களா? என்பதே சந்தேகம் தான்.
மறுபக்கம், 8 , 20, சுன்னத் ஜமா அத், நஜாத் என்று அது சம்பந்தமான மின் அஞ்சல்கள், இதனால் நமக்கிடையே பிரிவினை தான் ஏற்படுகிறது. இதையெல்லாம் விட்டு விட்டு, கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகள், திட்டங்கள் போன்றவற்றை நடத்தினாலே, போதும், அல்ஹம்துலில்லாஹ், நம் சமுதாயம், யாரயும் நம்பி இருக்கத் தேவையில்லை, இட ஒதுக்கீடு தேவை இருக்காது, யாருக்கும் அடிமைப்பட்டு இருக்க வேண்டியதில்லை.
நாம் எங்கிருந்தலும் சரி, அவரவர்கள் ஊரிலேயே, ஆரம்பிக்கலாம், இதனால், வருங்கால மாணவ சமுதாயம் பயன்பெறும், அவர்கள் சிறந்த குடிமக்களாக, நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் சேவை செய்வார்கள்.
இன்று, அப்துல் கலாம், நாட்டின் உயர் பதவியை அடைந்தன் காரணம், அவரின் கல்வி தகுதிதான பிரதானமாக அமைந்தது என்று எல்லோருக்கும் தெரியும். யூதர்கள், இன்று உலகையே ஆன்று கொண்டிருப்பதன் காரணம், அவர்களுடைய கல்வி தானே தவிர வேரொன்ருமில்லை என்பதை எல்லோரும் மனதில் நிலைநிறுத்திக் கொள்வோம்.